கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பது எப்போது?: அமைச்சர் புதுத் தகவல்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பது எப்போது?: அமைச்சர் புதுத் தகவல்!

கிளாம்பாக்கத்தில் புதிதாக அமையவிருக்கும் பேருந்து நிலையம் வரும் பிப்ரவரியில் திறக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து வெளிமாநிலம், மாவட்டங்களுக்குச் செல்வதற்காகச் சென்னை, கோயம்பேடு பகுதியில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் இயங்கிவருகிறது. தினமும் 8 முதல் 10 லட்சம் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். தென்மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் செங்கல்பட்டு தாண்டியதும் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கோயம்பேடு செல்வதற்கு காலவிரயம் ஆகிறது. இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புறநகர்ப் பகுதியான வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 400 கோடி மதிப்பீட்டில் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்துச் சமாளித்து வருகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் எனப் பயணிகளின் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் பிப்ரவரி 2023-ல் பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in