கடத்திய ஆட்டோ டிரைவர்; சிக்னலில் தப்பிச் சென்ற 7-ம் வகுப்பு மாணவன்: சென்னையில் நடந்த துணிகரம்

கடத்திய ஆட்டோ டிரைவர்; சிக்னலில் தப்பிச் சென்ற 7-ம் வகுப்பு மாணவன்: சென்னையில் நடந்த துணிகரம்

சென்னையில் கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன் ஆட்டோவில் இருந்து தப்பி சென்று காவல்துறையிடம் புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கொண்டித்தோப்பில் வாசித்து வருபவர் அரவிந்த் சர்மா. தொழிலதிபரான இவரது மகன் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று மாலை பள்ளி முடிந்து மாணவன் வீட்டிற்கு செல்ல வந்துள்ளான். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர், மாணவனை கடத்திச் சென்றுள்ளார். கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிக்னலில் ஆட்டோ நின்றுள்ளது.

அப்போது மாணவன் ஆட்டோவில் இருந்து தப்பித்து அருகில் இருந்த காவல்துறையினரிடம் விவரத்தை தெரிவித்துள்ளான். உடனடியாக காவல்துறையினர் ஆட்டோவை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் ஆட்டோ சிக்காமல் தப்பி சென்றது. இதையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி மாணவனை அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர். மாணவன் எதற்காக கடத்தப்பட்டான்? ஆட்டோவில் வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பட்டப்பகலில் மாணவன் ஒருவன் ஆட்டோவில் கடத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in