மயக்க பிஸ்கட் கொடுத்து நாய்க்குட்டி கடத்தல்: ஓய்வுபெற்ற எஸ்ஐ வீட்டில் கைவரிசை காட்டிய டவுசர் கொள்ளையர்கள்!

மயக்க  பிஸ்கட் கொடுத்து நாய்க்குட்டி கடத்தல்: ஓய்வுபெற்ற எஸ்ஐ வீட்டில் கைவரிசை காட்டிய டவுசர் கொள்ளையர்கள்!

திருவள்ளூவர் மாவட்டத்தில் மயக்க பிஸ்கட் கொடுத்து ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் வீட்டில் இருந்த 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நாய்க்குட்டியை டவுசர் கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூவர் மாவட்டம், பொன்னேரி அருகே தடபெரும்பாக்கத்தில் புருஷோத்தமன் ஹேமாமாலினி வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு இவரது வீட்டிற்கு வந்த டவுசர் கொள்ளையர்கள் இருவர், வீட்டை நோட்டமிட்டுள்ளனர். அத்துடன் தங்கள் வைத்திருந்த இரும்புக் கம்பியால் வீட்டிற்குள் புக முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களால் வீட்டிற்குள் ஆட்கள் இருந்த சத்தம் கேட்டதால் அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டுள்ளனர். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த கொள்ளையர்கள், அருகில் இருந்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் மோகன் வீட்டிற்குச் சென்றனர். அவர் 13 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய நாய்க்குட்டிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து டவுசர் கொள்ளையர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், பொன்னேரி போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது டவுசர் கொள்ளையர்கள் இருவர் நாய்க்குட்டியைத் திருடிச் செல்வது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in