3 மாத பெண்குழந்தை கடத்தல்: மதுரை ரயில் நிலையத்தில் பரபரப்பு

மதுரை ரயில் நிலையம்.
மதுரை ரயில் நிலையம்.3 மாத பெண்குழந்தை கடத்தல்: மதுரை ரயில் நிலையத்தில் பரபரப்பு

மதுரை ரயில் நிலையத்தில் மூன்று மாத பெண்குழந்தை கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலக்கியச் சிறப்பு மிக்க மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், திருமலைநாயக்கர் மஹால், அழகர்கோவில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் போன்ற பிரபலமான இடங்கள் உள்ளன. இவற்றைப் பார்வையிடுவதற்காக மதுரைக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் ரயில் மூலம் மதுரைக்கு வருகின்றனர்.

மதுரை ரயில் நிலையத்திற்கு தினமும் சராசரியாக 96 ரயில்கள் வந்து செல்கின்றன. அன்றாடம் சராசரியாக 51,296 பயணிகள் வந்து செல்வதால் எப்போதும் மதுரை ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில், மதுரை ரயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி பாத்திமா ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தார். அப்போது அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மூன்று மாத பெண் குழந்தையை ஒருவர் கடத்தியுள்ளார்.

இதனைப் பார்த்து சையது அலி பாத்திமா சத்தம் போட்டதையடுத்து அங்கிருந்த திலகர் திடல் போலீஸார், குழந்தை கடத்தல் ஆசாமியைப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலூர் பகுதியைச் சேர்ந்த போஸ் என்பது தெரிய வந்தது அவரிடம் போலீஸார் அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in