8 மாத கைக்குழந்தையுடன் கடத்தல்; கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்: அமெரிக்காவில் பயங்கரம்!

8 மாத கைக்குழந்தையுடன் கடத்தல்; கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்: அமெரிக்காவில் பயங்கரம்!

கலிஃபோர்னியாவில் கடத்தப்பட்ட 8 மாத கைக்குழந்தை, தம்பதி உட்பட இந்திய வம்சாவளியினர் நான்கு பேரை காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசித்து வந்தவர் ஜஸ்தீப் சிங் (36). இவர் தனது மனைவி ஜஸ்லீன் கவுர் (27), 8 மாத கைக்குழந்தை அரூஹி தேரி மற்றும் அமன்தீப் சிங் (39) என்பவருடன் கடத்தப்பட்டார். பணிபுரியும் இடத்திற்கு அருகே கடத்தல் கும்பலால் இவர்கள் காரில் வலுக்கட்டாயமாக கடத்தி செல்லப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இவர்கள் எதற்காக கடத்தப்பட்டார்கள் என்ற தகவல் தெரியாமல் திணறிய காவல்துறையினர், கடத்தல்காரர்களை அடையாளம் கண்டால் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என பொது மக்களை கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், 8 மாத கைக்குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை மெர்சிட் கவுண்டி காவல்துறையினர் இன்று சடலமாக மீட்டுள்ளனர். கடத்தல்காரர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடத்தல்காரர்களால் இந்திய வம்சாவளியினர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in