மாநிலக்கல்லூரி
மாநிலக்கல்லூரி கடத்திச்சென்று நியூ கல்லூரி மாணவர் மீது கொடூரத் தாக்குதல்: மாநிலக்கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது

கடத்திச்சென்று நியூ கல்லூரி மாணவர் மீது கொடூரத் தாக்குதல்: மாநிலக்கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது

சென்னையில் நியூ கல்லூரி மாணவரை கடத்திச் சென்று தாக்கிய மாநிலக்கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான்(19). இவர் ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து ரிஸ்வான் தனது நண்பர்களுடன் 25ஜி பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பேருந்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ள பாம்கிரோவ் பேருந்து நிலையம் சென்றபோது, மாநில கல்லூரியை சேர்ந்த 25 மாணவர்கள் பேருந்தில் ஏறி கூச்சலிட்டு கொண்டே வந்துள்ளனர். பின்னர் அவர்கள் பேருந்தில் பயணித்த நியூ கல்லூரி மாணவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த ஐடி கார்டை பறித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு ரிஸ்வானை மட்டும் மிரட்டி பேருந்தை விட்டு கீழே இறக்கிய அந்த கும்பல் பின்னர் அவரை பல பேருந்துகளில் அழைத்து சென்று சுற்றிவிட்டு இறுதியாக போரூர் பகுதிக்கு அழைத்து சென்று ரிஸ்வானை சரமாரி தாக்கி மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து ரிஸ்வான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதில் பதிவான முக அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தினர்.. விசாரணையில் நியூ கல்லூரி மாணவனை தாக்கியது மாநில கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் மாநில கல்லூரி மாணவர்களான வடபழனியை சேர்ந்த முகமது முஸ்தபா, அருண், கீர்த்தன், தனுஷ் உட்பட 9 பேரை கைது செய்து அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், கலகம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in