நிலத்தகராறில் வாலிபரைக் கடத்தி தலையைத் துண்டித்து செல்ஃபி: பெண் உள்பட 6 பேர் கைது

நிலத்தகராறில் வாலிபரைக் கடத்தி தலையைத் துண்டித்து செல்ஃபி: பெண் உள்பட 6 பேர் கைது

நிலத்தகராறில் வாலிபரை கடத்திக் கொலை செய்து அவரது தலையுடன் செல்ஃபி எடுத்த பெண் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் இத்தே கிராமத்தைச் சேர்ந்தவர் முண்டா. இவரது மகன் கானு முண்டா டிச.1-ம் தேதி காணாமல் போனார். இதுகுறித்து முர்கு காவல் நிலையத்தில் முண்டா புகார் செய்தார். கானு முண்டாவை தனது உறவினர் சாகர் முண்டா மற்றும் அவரது கூட்டாளிகள் கடத்திச் சென்றதாக புகார் அளித்திருந்தார். ஆனால், எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து குந்தி மாவட்ட (பொறுப்பு) காவல் துறை கண்காணிப்பாளர் நௌஷாத் ஆலம், தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து சாகர் முண்டாவைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. கானு முண்டாவை கடத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். வெட்டப்பட்ட தலையுடன் செல்ஃபி எடுத்ததுடன், உடலை தப்காரா காவல் நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் புதைத்திருப்பதாக சாகர் முண்டா கூறினார். அங்கிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதன் பின் துண்டிக்கப்பட்ட தலை 15 கி.மீ தொலைவில் உள்ள டோங்ரி காட்டில் இருந்து மீட்கப்பட்டது. நிலத்தகராறு காரணமாக கானு முண்டா கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து சீனு முண்டா, அமர்ஜித் பூர்தி, ஜெய் மசிஹ் ஒடேயா, அன்மோல் டுட்டி மற்றும் சந்த்முனி குடியா ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலை செய்யப்பயன்படுத்தப்படட் ஆயுதம், ஜீப் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். வாலிபரை கடத்தி அவரது தலையைத்துண்டித்து செல்ஃபி எடுத்த வழக்கில் பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in