கடலூர் தோலியப்பர் கோயிலில் கிடா விருந்து... ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்!

கோயில் விழாவில் கறி விருந்து
கோயில் விழாவில் கறி விருந்து

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நடந்த கோயில் திருவிழாவினை முன்னிட்டு கிடா விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று உண்டு மகிழ்ந்தனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ளது கொழை சாவடி குப்பம். இந்த கிராமத்தில் தோலியப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலை தங்கள் குலதெய்வமாக வழிபடும் சுமார் 600 வகையராக்கள் உள்ளனர். ஆண்டு தோறும் ஆடிமாதம் கொண்டாடப்படும் ஆடி திருவிழா சிறப்பு வாய்ந்தது.

இத்திருவிழாவில் பங்கேற்க உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடுகளில் பணியாற்ற கூடியவர்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஆடி முதல் நாளில் காப்பு கட்டுடன் துவங்கியது.

8 நாட்கள் நடந்த இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. தோலியப்பன் தேர் வீதியுலா நிறைவடைந்து கோயிலை அடைந்த நிலையில், அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து அங்கு படையலிடப்பட்ட கிடாவினை கொண்டு உணவு தயார் செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உண்டு மகிழ்ந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in