வரையாட்டை துன்புறுத்தி மகிழ்ந்த கேரள இளைஞர்கள்: போட்டாவை வைத்து வளைத்தது வனத்துறை

வரையாட்டை துன்புறுத்தி மகிழ்ந்த கேரள இளைஞர்கள்: போட்டாவை வைத்து வளைத்தது வனத்துறை

வால்பாறையில் வரையாட்டைத் துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை வனத்துறை கைது செய்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை செல்லும் 6-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வரையாட்டின் கொம்பைப் பிடித்து சுற்றுலாப் பயணிகள் இருவர் துன்புறுத்துவது போல புகைப்படம் ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் ஆனைமலை வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் மலைப்பாதையில் வரையாட்டை துன்புறுத்தியது கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த ஷெல்டன் ராஜா(49), ஜோபிஆபிரகாம்(40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கேரளா விரைந்த வனத்துறை அதிகாரிகள் இருவரையும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பின்னர் விசாரணையில், கடந்த 5-ம் தேதி நண்பர்களுடன் வால்பாறை சாலையில் வரையாடுகளின் கொம்புகளைப் பிடித்து துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in