எக்ஸ்பிரஸ் ரயிலை தவறவிட்ட வாலிபர் செய்த விபரீத செயல்: போலீஸில் சிக்கியபோது நடந்த சுவாரஸ்யம்

ரயில் நிலையம்
ரயில் நிலையம் ரயிலை தவறவிட்ட வாலிபர் செய்த விபரீத செயல்: போலீஸில் சிக்கியபோது நடந்த சுவாரஸ்யம்

கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் இருந்து புறப்பட்ட ரயிலை தவறவிட்ட வாலிபர் ஒருவர் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து, அடுத்த நிறுத்தத்தில் சோதனை நடந்துகொண்டிருந்தபோது ரயிலில் ஏறினார். அவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெய்சிங். இவர் எர்ணாக்குளத்தில் இருந்து வட இந்தியா செல்ல திருவனந்தபுரம்-ராஜ்தானி விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். இந்தநிலையில் ஜெய்சிங் எர்ணாக்குளம் ரயில் நிலையத்திற்குத் தாமதமாகச் செல்லவே ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டது. ரயிலை தவறவிட்ட ஜெய்சிங் ரயிலைப் பிடிக்க ஒரு யோசனை செய்தார். ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்து ராஜ்தானி விரைவு ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவலைச் சொன்னார். இதனைத் தொடர்ந்து அந்த ரயில் ஷோர்ன்பூர் என்ற ரயில் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு 3 மணிநேரமாக சோதனை நடந்தது. வெடிகுண்டு எதுவும் சிக்காததால் இது புரளி எனத் தெரியவந்தது.

அப்போது மிகத்தாமதமாக அந்த ரயில் நிலையத்திற்கு வந்து ஜெய்சிங் ரயிலில் ஏறினார். அவரது டிக்கெட்டை சோதனை செய்துபார்த்தபோது அதில் எர்ணாக்குளத்தில் இருந்தே ஏற வேண்டியது இருந்தது. இதனைத் தொடர்ந்து அவரை சந்தேகப்பட்ட ரயில்வே போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜெய்சிங் ரயிலை அடுத்த நிறுத்தத்தில் பிடிக்க வேண்டும் என்பதற்காக ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யாகச் சொன்னத் தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார், ஜெய்சிங்கை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in