தன்னிடம் பயின்ற 26 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் சிக்கிய கேரள ஆசிரியர்

தன்னிடம் பயின்ற 26 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் சிக்கிய கேரள ஆசிரியர்

கேரளாவில் தன்னிடம் பயின்ற 26 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேரள ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பைசல் மேச்சேரி. இவர் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ளார். இந்தப் பள்ளியில் இவர் நான்கு ஆண்டுகளாக பணிசெய்துவந்தார். இந்தப் பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வை பள்ளி நிர்வாகம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவது வழக்கம். அப்படி நடத்தியபோது, ஆசிரியர்களிடம் மாணவிகள் பைசல் மேச்சேரி குறித்து அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் சென்றது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்தனர்.

அவர்கள் மூலம் காவல்துறைக்கு புகார் சென்றது. முதலில் 5 மாணவிகள் பைசல் மேச்சேரிக்கு எதிராகப் புகார் கொடுத்தனர். தொடர்ந்து 21 மாணவிகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் பைசல் மேச்சேரி கைது செய்யப்பட்டார். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்த போலீஸார் அவரால் வேறு ஏதும் மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in