கேரள சபாநாயகர் திடீர் ராஜினாமா: என்ன காரணம் தெரியுமா?

கேரள சபாநாயகர் திடீர் ராஜினாமா: என்ன காரணம் தெரியுமா?

கேரள மாநில சபாநாயகராக இருந்துவந்த ராஜேஷ் திடீரென தன் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் சித்தயம் கோபகுமாரிடம் சமர்பித்தார். கேரள அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதில் சபாநாயகர் ராஜேஷ்க்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படுகிறது. இதற்காகவே அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தலச்சேரி தொகுதியின் எம்.எல்.ஏ ஷம்ஷீரை புதிய சபாநாயகராக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதேநேரம் ராஜேஷின் இலாகா இதுவரை அறிவிக்கப்படவில்லை. ’கடந்த 15 மாதங்கள் சபாநாயகராக இருந்தது என் வாழ்வில் மறக்கமுடியாத தருணம். கட்சி கொடுத்த பணியை நேர்மையுடன் செய்திருக்கிறேன்”என நெகிழ்கிறார் முன்னாள் சபாநாயகர் ராஜேஷ்.

கலால் துறை அமைச்சராக இருந்த கோவிந்தன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார். அரசுப்பதவி, கட்சிப்பணி இரண்டிலும் ஒரேநபர் இருக்கமுடியாது என்னும் மார்க்சிஸ்ட் கட்சியின் விதிப்படி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கோவிந்தன். இதேபோல் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்த சஜி செரியன், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கேரள அமைச்சரவையில் இரு அமைச்சர் பதவியிடம் காலியாக உள்ளது.

சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் ராஜேஷ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளராகவும் இருந்தவர். கேரளத்தை உலுக்கிய எண்டோசல்பான் நச்சு உரத்தூவலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்குத் தொடர்ந்து களத்தில் நின்றவர் ஆவார். அவருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in