கேரள மார்க்சிஸ்ட் நிர்வாகியை கொலை செய்தது யார்?: போலீஸார் விசாரணையில் பரபரப்பு

கேரள மார்க்சிஸ்ட் நிர்வாகியை கொலை செய்தது யார்?:  போலீஸார் விசாரணையில் பரபரப்பு

கேரள மாநிலம் பாலக்காடு மருதரோட்டில் கடந்த 14-ம் தேதி இரவு மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் கமிட்டி உறுப்பினர் ஷாஜஹான் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். இவ்விவகாரத்தில் 9 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது வீட்டின் அருகே கடந்த 14 ஆம் தேதி, சுதந்திர தின விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, ஷாஜஹானை இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று வெட்டியது. அவரை மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு குறித்தும், அதன் விசாரணைக் குறித்தும் காவல்துறை உயர் அதிகாரிகள் சில முக்கியத் தரவுகளை பகிர்ந்துள்ளனர். அதன்படி, “இவ்வழக்கில் தொடர்புடைய இருவர் ஏற்கனவே பிடிக்கப்பட்டு விசாரணை நடந்துவரும் நிலையில் இந்தக் கொலைச் சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் 7 பேர் நேற்று பிடிபட்டனர். இதன்மூலம் போலீஸாரின் விசாரணை வளையத்தில் 9 பேர் உள்ளனர்.”என்றார்.

பாஜகவினரே இக்கொலையை அரங்கேற்றியதாக மார்க்சிஸ்ட் தரப்பும், மார்க்சிஸ்ட் கட்சியின் உள்கட்சித் தகராறால் நிகழ்ந்த கொலை என பாஜக தரப்பும் இதில் பரஸ்பரம் குற்றம் சாட்டிவருகிறது. அதேநேரம் ஷாஜகான் மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளூர் கமிட்டியில் சேர்க்கப்பட்டதற்கு கட்சி மட்டத்தில் எதிர்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணையில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்ட பின்பே இக்கொலையின் பின்னால் பாஜக இருக்கிறதா? மார்க்சிஸ்ட் கட்சியின் உட்கட்சித் தகராறா என்ற முழுவிவரமும் தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in