பரிசு பெறும் ஸ்ரீஜு
பரிசு பெறும் ஸ்ரீஜு

ரூ.45 கோடி... கேரள இளைஞருக்கு அமீரக லாட்டரியில் அடித்தது ஜாக்பாட்

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜூ என்பவர், அமீரக லாட்டரி ஒன்றில் ரூ45 கோடி ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார்.

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறும். இதனால் லாட்டரி மோகத்துக்கு ஆளான சேட்டன்கள், பிழைப்புக்காக நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் லாட்டரிகளை துரத்தி வருகின்றனர். இந்த வகையில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளிநாட்டு லாட்டரிகளில் ஜாக்பாட் அடிப்பது அதிகரித்து வருகிறது. அவர்களில் ஒருவராக அண்மையில் சேர்ந்திருக்கிறார் ஸ்ரீஜூ.

ஸ்ரீஜூ
ஸ்ரீஜூ

39 வயதாகும் ஸ்ரீஜூ கடந்த 11 ஆண்டுகளாக அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது துபாய் அருகே எண்ணெய் நிறுவனம் ஒன்றில் கன்ட்ரோல் ரூம் ஆபரேட்டராக இருக்கிறார். திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான ஸ்ரீஜுவுக்கு, பிறந்த ஊரில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. ஆனால் ஆண்டுக்கணக்கில் அது கனவாகவே நீடிக்கிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் லாட்டரி ஒன்றில் பரிசு விழுந்திருக்கும் தகவல் ஸ்ரீஜூவுக்கு கிடைத்தது. பலமுறை லாட்டரி வாங்கி ஏமாந்திருக்கும் ஸ்ரீஜூவால் இதனை நம்ப முடியவில்லை. தான் வாங்கிய 154வது மஹ்சூஸ் லாட்டரி குலுக்கலின் இணையதளத்தில் தனது லாட்டரி எண்ணினை சரிபார்த்தார். அதிலும் பரிசுத்தொகையை பார்த்ததும் கிறுகிறுத்துப் போனார். காரணம் இந்திய மதிப்பில் அது ரூ45 கோடி என்பதாக இருந்தது.

ஸ்ரீஜூ
ஸ்ரீஜூ

அதிகாரபூர்வமாக லாட்டரி நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தல் வந்த பிறகே ஸ்ரீஜூவுக்கு நம்பிக்கை வந்தது. 11 ஆண்டுகளாக அமீரகத்தில் தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் விடிவு கிட்டியதாக மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார். பெரிய தொகை கிடைத்தால் ஊரில் நல்லதாக ஒரு வீடு கட்டலாம் என்பதற்கு அப்பால் அவர் அதிகம் யோசித்ததில்லை. தற்போது அடித்த ஜாக்பாட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று இன்னும் முடிவெடுக்க முடியாது ஆனந்தக் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார் ஸ்ரீஜூ.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in