அதிகரிக்கும் உயிரிழப்பு; இனி இந்த சான்றிதழ் கட்டாயம்: உணவக ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தது கேரள அரசு

முதல்வர் பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன்அதிகரிக்கும் உயிரிழப்பு; இனி இந்த சான்றிதழ் கட்டாயம்: உணவக ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தது கேரள அரசு

கேரள அரசு, அம்மாநிலத்தில் உணவகங்களில் பணி செய்வோருக்கு மருத்துவச் சான்றிதழைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. மருத்துவச் சான்று இருப்போர் மட்டுமே உணவகங்களில் பணிசெய்ய முடியும் என்னும் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

கேரளத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி ஒருவர் புட்பாய்சன் ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். அதன்பின்பும் சுற்றுலாப் பயணிகள் சிலர் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த செவிலியர் ஒருவர், மருத்துவமனை வளாகத்தில் கலப்பட உணவு சாப்பிட்டு உயிர் இழந்த சோகச் சம்பவமும் அரங்கேறியது.

அதன் பின்னர் கேரள அரசு, உணவகங்களின் மீது தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டது. தரமான உணவுப் பொருள்களுக்கு இணையாக, ஊழியர்கள் சுகாதாரம், நோய் இன்றி இருப்பதை உறுதி செய்வதிலும் தனிக்கவனம் செலுத்துமாறு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இப்போது கேரளத்தில் உள்ள உணவகங்கள், உணவு சமைக்கும் கூடங்கள், இதேபோல் கல்யாணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சமையல் செய்துகொடுக்கும் கேட்டரிங் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிசெய்யும் ஊழியர்கள் அனைவரும் அந்த, அந்தப் பகுதியில் உள்ள வட்டார, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து தொற்றுநோய் மற்றும் வெளிப்புறக் காயங்கள் இல்லை என மருத்துவச் சான்று பெற வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவச் சான்றை கடையின் உரிமையாளர் சுகாதாரத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். உரிய உடல் தகுதி சான்றிதழ் இல்லாதவரை பணி அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in