உள்ளாடையிலிருந்த 1,884 கிராம் தங்கம்; சோதனையில் தப்பிய இளம்பெண்: விமான நிலையத்துக்கு வெளியே சிக்கினார்!

உள்ளாடையிலிருந்த 1,884 கிராம் தங்கம்; சோதனையில் தப்பிய இளம்பெண்: விமான நிலையத்துக்கு வெளியே சிக்கினார்!

துபாயில் இருந்து கேரளாவுக்கு 1,884 கிராம் தங்கத்தை கடத்தி வந்த 19 வயது இளம்பெண்ணை விமான நிலையத்துக்கு வெளியே காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

துபாயில் இருந்து நேற்றிரவு கோழிக்கோட்டிற்கு விமானம் ஒன்று வந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 19 வயதுடைய ஷக்லா என்ற பெண் சோதனையில் சிக்காமல் விமான நிலையத்துக்கு வெளியே வந்திருக்கிறார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அவர்கள் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்தனர். அந்த நேரத்தில் வெளியே வந்த ஷக்லாவை கோழிக்கோடு போலீஸார் கைது செய்து அவரது உடமைகளை பரிசோதனை செய்தனர்.

அப்போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தைத்திருந்த 1,884 கிராம் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த தங்கத்தை கோர்ட்டில் ஒப்படைத்த போலீஸார் மேல் விசாரணைக்காக வழக்கு விவரங்களை சுங்கத் துறையினர் வசம் ஒப்படைத்தனர். அத்துடன் இளம்பெண் ஷக்லாவைக் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். கோழிக்கோடு சர்வதேச விமானநிலையத்துக்கு வெளியே போலீஸார் கடத்தல் தங்கத்தைப் பிடிப்பது இது 87-வது முறை என்பது குறிப்பிடத் தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in