கல்லூரி மாணவிகளுடன் `செம' டான்ஸ் போட்ட பெண் கலெக்டர்

கல்லூரி மாணவிகளுடன் `செம' டான்ஸ் போட்ட பெண் கலெக்டர்

கல்லூரி மாணவ, மாணவியருடன் பெண் கலெக்டர் ஒருவர் செம டான்ஸ் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியரான திவ்யா எஸ்.நாயர் கலந்து கொண்டார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது, மாணவிகளின் நடனத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ்.நாயர், திடீரென மாணவ-மாணவியருடன் இணைந்து நடனமாடத் துவங்கினார்.

இதனால் மாணவ, மாணவியர் மட்டுமின்றி விழாவிற்கு வந்திருந்த அனைவரும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஆட்சியரின் இந்த நடன காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.