இஸ்ரேலில் காணாமல் போன கேரளா விவசாயி: 10 நாட்களுக்குப்பின் தாய்நாடு திரும்பினார்

இஸ்ரேலில் விவசாயி பிஜு குரியன்
இஸ்ரேலில் விவசாயி பிஜு குரியன் இஸ்ரேலில் காணாமல் போன கேரளா விவசாயி: 10 நாட்களுக்குப் பின் தாய்நாடு திரும்பினார்

இஸ்ரேலில் காணாமல் போன கேரளா விவசாயி பத்து நாட்களுக்குப் பின் இன்று தாய்நாடு திரும்பினார்.

இஸ்ரேலின் நவீன விவசாய தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரளா அரசு சார்பில் விவசாயத்துறை அழைத்துச் சென்ற குழுவில் இடம் பெற்றிருந்தவர் கண்ணூரைச் சேர்ந்த விவசாயி பிஜு குரியன் 48). கடந்த பிப்.12-ம் தேதி இந்த குழு இஸ்ரேல் சென்றிருந்தது.

இந்நிலையில், கடந்த பிப்.16-ம் தேதி இரவு 7 மணியளவில் டெல் அவிவ் அருகே அமைந்துள்ள ஹெர்ஸ்லியா என்ற நகரத்தில் உணவு சாப்பிடுவதற்காக இந்தக்குழு சென்றது. இதன் பின் பிஜு குரியன் காணாமல் போனார். இந்த நிலையில், இன்று காலை கேரளா மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்தடைந்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," முதலில் கேரள அரசு, மாநில விவசாயத்துறை அமைச்சர், 27 பேர் கொண்ட குழு மற்றும் அக்குழுவிற்கு தலைமை தாங்கிய அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நவீன விவசாய தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரளா அரசு சார்பில் இஸ்ரேலுக்குச் சென்றேன். ஐந்து நாள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஜெருசேலம், பெத்லஹேமில் உள்ள புனித தலங்களைப் பார்வையிடச் சென்றேன். இதன் பின் எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை. அத்துடன் என் போனில் இணைய வசதியோ, சர்வதேச அழைப்பு வசதியோ இல்லை. இதனால் வேறு ஒருவரின் உதவியுடன், நான் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாகவும் எனது குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்தேன். எனது சகோதரரின் உதவியுடன் தற்போது இந்தியா திரும்பியுள்ளேன்" என்றார். பிஜு குரியன் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் கூறித்து அரசு ஆராயும் என்று மாநில விவசாயத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in