'பூப்போல மனசு; ஏறாத வயசு'... விஜய்க்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்!

'பூப்போல மனசு; ஏறாத வயசு'... விஜய்க்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்!

நடிகர் விஜய் பிறந்தநாளான இன்று, அவருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், " பூப்போல மனசு, ஏறாத வயசு, கோலிவுட்டின் வாரிசு, அவரின் பெயர் தளபதி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சார்!!

இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியையும் வெறித்தனமான பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் தரட்டும். பெரிய திரைகளில் 'வாரிசு' பார்க்க காத்திருக்க முடியாது!!" என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in