மகனுக்காக ஆபாச படங்களை அழித்த வழக்கில் சிக்கியவர்: நாகர்கோவில் காசியின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

மகனுக்காக ஆபாச படங்களை அழித்த வழக்கில் சிக்கியவர்: நாகர்கோவில் காசியின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

நாகர்கோவிலில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, மிரட்டி பணம் வசூலித்த காசி கைது செய்யப்பட்டிருந்தார். காசிக்கு ஆதரவான ஆதாரங்களை அழித்த வழக்கில் அவரது தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார். இதில் தங்கபாண்டியனுக்கு மதுரை உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

காசியின் தந்தை தங்கபாண்டி
காசியின் தந்தை தங்கபாண்டி

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. இவர் சமூக வலைதளங்கள் வழியாக அறிமுகமான மாணவிகள், பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்காட்டி நெருக்கமாக பழகியுள்ளார். அத்துடன் அவர்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பண மோசடி செய்தது உட்பட பல்வேறு வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் 2020 முதல் காசி சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் காசியின் செல்போன், லேப்டாப்பில் இருந்த ஆபாச படங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனை போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே இவர் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்தபோது நீதிபதி புகழேந்தி, வழக்கு விசாரணையில் இருப்பதால் தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து கடந்த ஜூன் 30-ம் தேதி மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தக்கல் செய்தார் தங்கபாண்டியன். இவ்வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார்.

அந்த நிபந்தனைகளில் சாட்சியங்களை மிரட்டவோ, சாட்சிகளைக் கலைக்கும் நோக்கத்தில் செயல்படவோ கூடாது. வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். இந்த நிபந்தனைகளை மீறினால் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும் எச்சரித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in