இந்தியாவின் தூய்மையான காற்றுள்ள நகரங்கள்... டாப் 10 பட்டியலில் முன்னிலை வகிக்கும் தென்மாநிலம்!

தூய்மையான காற்று
தூய்மையான காற்று

இந்தியாவின் தூய்மையான காற்று உலாவும் நகரங்களின் டாப் 10 பட்டியலில் கர்நாடகாவை சேர்ந்த சேர்ந்த பல்வேறு நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இதன் மூலம் உயிரோட்டமுள்ள வாழ்விடமாக கர்நாடகா சிறப்பு பெறுகிறது.

காற்றின் தரம் குறித்தான தரவுகளை ஆய்வு செய்யும் ’ரெஸ்பைரர் லிவிங் சயின்சஸ் அண்ட் க்ளைமேட் ட்ரெண்ட்ஸ்’ என்ற அமைப்பின் அறிக்கையின்படி, தூய்மையான காற்று நிறைந்த இந்தியாவின் முதல் 10 இடங்களின் பட்டியலில் கர்நாடகா ஆதிக்கம் செலுத்துகிறது.

மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் நகரம் கன மீட்டருக்கு 11 மைக்ரோ கிராம் என்றளவில் காற்றின் தரத்தை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து கர்நாடகாவின் சிக்கமகளூரு நகரம் கன மீட்டருக்கு 17.6 மைக்ரோ கிராம் என்றளவிலும், ஹரியானாவில் உள்ள மண்டிகேரா நகரம் கன மீட்டருக்கு 17.7 மைக்ரோ கிராம் என்றளவிலும் காற்றின் தர அளவைப் பெற்றுள்ளன.

இயற்கை எழில் கொஞ்சும் கர்நாடகா
இயற்கை எழில் கொஞ்சும் கர்நாடகா

இந்த டாப் 10 பட்டியலில் இடம் பிடித்திருக்கும், சாமராஜ நகர், மடிகேரி, விஜயபுரா, ராய்ச்சூர், சிவமோகா, கடக், மைசூரு என இதர ஏழு நகரங்களும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவை ஆகும். இதன் மூலம் நாட்டில் தூய்மையான காற்றை பெற்றிருக்கும் நகரங்களின் டாப் 10 பட்டியலில் கர்நாடகமே பெரும் பங்கு வகித்திருக்கிறது.

காற்றின் நீடிக்கும் தரம் காரணமாக, சர்வதேச அளவில் தொழில் நிறுவனங்கள் கர்நாடக மாநிலத்தை குறிவைப்பது மற்றும் அங்கே வாழ விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பு ஆகியவை தொடர்ந்து எகிறி வருகின்றன. அதற்கேற்ப இந்த நகரங்களின் ரியல் எஸ்டேட் மதிப்பும் உயர்ந்தே வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in