மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 50 வயது பள்ளிப் பேருந்து ஓட்டுநரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 50 வயது பள்ளிப் பேருந்து ஓட்டுநரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்

கர்நாடக மாநிலம் சக்கராயபட்டனாவில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளிப்பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் சக்கராயபட்டனாவில் பள்ளிப் பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் ராஜப்பா(50) மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மாணவிகள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ இறங்கும் போது அவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். வியாழக்கிழமை அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதற்கு முன்பு கிராம மக்கள் அவரைப் பிடித்து ஒரு கோயில் தூணில் கட்டி வைத்தனர். அந்த நபரை கிராம மக்கள் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in