‘ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்’

உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு
ஹிஜாப் - வழக்கு
ஹிஜாப் - வழக்கு

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதிக்கக்கோரி, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில இஸ்லாமிய மாணவிகள் முறையிட்டுள்ளனர்.

கடந்தாண்டு இறுதித் தேர்வு தருணத்தில் கர்நாடக மாநிலத்தின் உடுப்பியை மையமாகக் கொண்டு ஹிஜாப் சர்ச்சை வெடித்தது. பள்ளி வளாகத்தில் ஹிஜாபுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம், ஆதரவு - எதிர்ப்பு என பொதுவெளியில் பெரும் பிரச்சினைக்கு வித்திட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் சார்பில் தொடுக்கப்பட்ட ஹிஜாப் வழக்கு கடைசியில் தள்ளுபடி செய்யப்பட்டது.

நடப்பாண்டு இறுதித்தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் கர்நாடக மாநில இஸ்லாமிய மாணவிகள் சார்பில், ஹிஜாப் அணிந்து தேர்வறைக்கு செல்ல அனுமதிக்க கோரும் மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது குறித்து விசாரித்த இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

மேலும், ஹோலி விடுமுறை முடிந்த பிறகு புதிய அமர்வு ஒன்று இந்த முறையீட்டை விசாரிக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு உறுதியளித்துள்ளது. தேர்வு நெருங்கிவிட்டதை மாணவிகள் தரப்பு எடுத்து சொன்னபோது, ’கடைசி நேரத்தில் நீங்கள் வந்திருக்கிறீர்கள்’ என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in