காதலியை கொடூரமாக கொன்ற காதலன்: தலையுடன் காவல் நிலையம் சென்றதால் பதறிய போலீஸ்

காதலியை கொடூரமாக கொன்ற காதலன்: தலையுடன் காவல் நிலையம் சென்றதால் பதறிய போலீஸ்

கர்நாடக மாநிலம், விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னிபோரய்யனஹட்டியை சேர்ந்த பசவராஜும்(23), அதே ஊரைச் சேர்ந்த நிர்மலாவும் (21) மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, தன்னை திருமணம் செய்து கொள் என்று காதலனை கட்டாயப்படுத்தியுள்ளார் நிர்மலா. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பசவராஜ். இதை அறிந்து கொந்தளித்த நிர்மலா, காதலனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகவல் பசவராஜுவின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த நிர்மலாவிடம் பசவராஜ் தகராறு செய்துள்ளார். அப்போது, இவருக்கும் தகராறு முற்றிய நிலையில், தான் கொண்டு வந்த கத்தியால் நிர்மலாவின் கழுத்தை அறுத்துள்ளார் பசவராஜ். இதில், நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், நிர்மலாவின் தலையை எடுத்துக் கொண்டு கானஹொசஹள்ளி காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார் பசவராஜ். இதனை பார்த்து அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். பசவராஜை கைது செய்த காவல்துறையினர் நிர்மலாவின் தலையை கைப்பற்றி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in