‘தடுப்பூசி போட்டிருப்பதால் பிரச்சினை இல்லை’ - கரோனா தொற்றுக்குள்ளான கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர்

‘தடுப்பூசி போட்டிருப்பதால் பிரச்சினை இல்லை’ - கரோனா தொற்றுக்குள்ளான கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர்

கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதை நேற்று மாலை ட்வீட் மூலம் தெரிவித்த அவர், ‘கரோனா பெருந்தொற்றின் மூன்று அலைகளின்போது தொற்றுக்குள்ளாகாமல் இருந்த எனக்கு தற்போது தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. எனக்கு மெலிதான அறிகுறிகள் ஏற்பட்டிருக்கின்றன. வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு, எல்லா கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் பின்பற்றுவேன்’ என்று அதில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், முழுமையாகத் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டிருப்பதால் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் கடந்த சில நாட்களாகத் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

கர்நாடகத்தில் நேற்று 297 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதில் பெங்களூருவில் மட்டும் 276 பேர் கரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in