மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!

துரைமுருகன்
துரைமுருகன்மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!

மேகேதாட்டுவில் அணைகட்ட கர்நாடாகவுக்கு உரிமை இல்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், கழிஞ்சூர் பகுதியில் ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு அணை கட்டமுடியாது. ஆனால், கர்நாடகா அரசு கட்டுவோம் எனச் சொல்வார்கள். அது அவர்களது ஆசை. ஆனால் அவர்களுக்கு கட்ட உரிமை கிடையாது. அதை சொல்வதற்கு நமக்கு உரிமை உண்டு.

மேகேதாட்டு அணையில் இருந்து இயற்கையாகவே தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. பில்லி குண்டு அணை வரையில் 80 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வருகிறது. அணை கட்ட முதலில் மத்திய நீர் மேலாண்மை வாரியம், மாசுக் கட்டுப்பாட்டுத்துறை, வனத்துறை ஆகியவற்றின் அனுமதியைப் பெற வேண்டும்.

அப்படி கிடைத்தாலும் அதன் பின்னர் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டும். அதனால் தான் சொல்கிறேன். மேகேதாட்டுவில் கர்நாடகாவால் அணைகட்ட முடியாது. அரசியலுக்காக இதெல்லாம் கர்நாடகாவில் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in