இன்று பந்த்... 144 தடை உத்தரவு! வெறிச்சோடிய சாலைகள்; விடிய விடிய வெளியேறிய மக்கள்!

இன்று பந்த்... 144 தடை உத்தரவு! வெறிச்சோடிய சாலைகள்; விடிய விடிய வெளியேறிய மக்கள்!

Published on

இன்று கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்ற நிலையில், இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வரும் கர்நாடக மாநில எதிர்கட்சியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை, பேருந்து, ஆட்டோ முதலியவை இயங்காது என்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பெங்களூருவில் இருந்து பந்த் அச்சம் காரணமாக விடிய விடிய மக்கள் வெளியேற துவங்கியதால் நேற்று காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஐடி ஊழியர்கள் அதிகம் பணியாற்றும் பெங்களூருவின் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் சுமார் 3.5 லட்சம் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தன. நேற்று முன் தினம் மாலை பள்ளி விட்டு வீட்டுக்குப் புறப்பட்ட மாணவர்கள், வீடு சென்றடைய இரவு வரை தாமதமானது.

இன்று மாலை 6 மணி வரை போராட்டம் நடைப்பெற உள்ளதால்
நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் முடங்கலாம். தமிழகத்திலிருந்து செல்லும் வாகனங்கள், எல்லையில் நிறுத்தப்படுகின்றன. தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in