பணி நியமனத்தில் மோசடி: கர்நாடக ஏடிஜிபி அம்ரித் பால் அதிரடியாக கைது!

பணி நியமனத்தில் மோசடி: கர்நாடக ஏடிஜிபி அம்ரித் பால் அதிரடியாக கைது!

கர்நாடகாவில் காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏடிஜிபி அம்ரித் பால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி நடந்த உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தேர்வினை எழுதிய கிட்டத்திட்ட 107 பேர் முறைகேட்டில் ஈடுப்பட்டது அம்பலமாகியது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ம் ஆண்டு நடைபெற்ற உதவி ஆய்வாளர் பணி நியமன தேர்வுக்குழுவின் தலைவராக அம்ரித் பால் இருந்தார். அப்போது 15 பேரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வுமையத்தில் விடை எழுதும்போது புளூடூத் பயன்படுத்த அனுமதித்தது, தேர்வு மையத்திலேயே விடைத்தாள்களை திருத்தியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரியவந்துள்ளது. இந்த தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 40 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அம்ரித் பாலிடம் ஏற்கெனவே 4 முறை விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை ஆகும். சிஐடி விசாரணையில் அம்ரித் பாலுக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in