பிடித்துப்போன தமிழ் கலாச்சாரம்: கன்னியாகுமரி டாக்டரை மணந்தார் பிலிப்பைன்ஸ் இளம்பெண்

பிடித்துப்போன தமிழ் கலாச்சாரம்: கன்னியாகுமரி டாக்டரை மணந்தார் பிலிப்பைன்ஸ் இளம்பெண்

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பழக்க வழக்கமும் தமிழ் கலாச்சாரமும் பிடித்து போக தமிழ்நாட்டு மருமகளாகி இருக்கிறார் பிலிப்பைன்ஸை நேர்ந்த இளம்பெண்.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் டாக்டர் குணசீலன்-மெர்சி தம்பதியர். இவர்களது ஒரே மகன் ஜெமி ரென்ஸ்விக். ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மின்டேனா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜிம்மி ஜமீலா- மெரிட்டா ஜமீலா தம்பதியர். இவர்களது மகள் லா லைனி. எம்.பி.ஏ. பட்டதாரி. ‌பெற்றோருடன் கடந்த வருடம் கன்னியாகுமரி வந்தபோது ஜெமி ரென்ஸ் விக் குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரது குடும்பமும் அன்புடன் பழகினர்.

அப்போது லா லைனிக்கு கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பழக்க வழக்கமும் தமிழ் கலாச்சாரமும் பிடித்து போக தான் தமிழ்நாட்டு மருமகளாக விரும்புவதை கூறியுள்ளார். மேலும் டாக்டர் ஜெமி ரென்ஸ்விக்கை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்தனர். இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நேற்று (8-ம் தேதி) நாகர்கோவில் தேரேகால் புதூரில் கங்கா கிராண்டியூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரது குடும்ப உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர். தமிழ் கலாச்சாரத்தை விரும்பி நாகர்கோவில் வாலிபரை திருமணம் செய்த லா லைனி இனி தமிழ்நாட்டு பெண்ணாக மருமகளாக வாழ முடிவு செய்துள்ளார்.

இந்த திருமண வரவேற்பில் தற்போதுள்ள விதிகளால் பிலிப்பைன்சில் உள்ள லாலைனியின் உறவினர்கள் இங்கு வர முடியவில்லை. ஆனாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமண வரவேற்பில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in