கரன்சி நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்: பரவசம் அடைந்த காஞ்சிபுரம் பக்தர்கள்!

கரன்சி நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்: பரவசம் அடைந்த காஞ்சிபுரம் பக்தர்கள்!

காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் 15 லட்சம் ரூபாய் அளவிற்கு கரன்சி நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேல சிங்க விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏலேல சிங்க விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுகளால் கருவறையில் உள்ள விநாயகருக்கு அலங்காரம் செய்வது வழக்கம். அந்த வகையில் 10 முதல் 2000 வரையிலான ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் தரிசனம் செய்து வருகிறார்கள். ஆரம்பக் காலங்களில் நாணயங்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கடந்த சில ஆண்டுகளாகவே ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறார். தற்போதைய அலங்காரத்திற்கு 15 லட்ச ரூபாய் அளவிற்கு புதிய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in