காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ஏன்?

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ஏன்?

மழைநீர் பள்ளிகளில் தேங்கியுள்ளதால் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் மழை தற்காலிகமாக ஓய்ந்து வெயில் அடித்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத மழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் புகுந்த மழை வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு உட்படக் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நன்மங்கலம், வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நன்மங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளி, அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மானாமதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பள்ளிகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in