மதுரை மாநகரில் கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்தப்படும்: காவல்துறை ஆணையர் நரேந்திரன் நாயர் உறுதி

நரேந்திரன் நாயர்
நரேந்திரன் நாயர்

``மதுரை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படும்'' என காவல்துறை ஆணையர் நரேந்திரன் நாயர் தெரிவித்தார்.

மதுரை மாநகர் காவல்துறை ஆணையராக நரேந்திரன் நாயர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கூறுகையில், ``மதுரை மாநகர் போலீஸார் மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு, சித்திரை திருவிழா ஆகியவற்றை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட போலீஸார் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவர். மதுரை மாநகரில் ரவுடிசம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் குற்றச்செயல்கள் முழு கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in