`தப்பு செய்துவிட்டேன்; அண்ணனுடன் சேர்த்து வையுங்கள்'- நம்பிச் சென்ற இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற வாலிபர்

`தப்பு செய்துவிட்டேன்; அண்ணனுடன் சேர்த்து வையுங்கள்'- நம்பிச் சென்ற இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற வாலிபர்

அண்ணனுடன் திருமண நிச்சயம் ஆன இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிக் கொன்ற தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கி செல்வி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் ராம்குமார் என்பவரிடம் ஓடிப்போய் இசக்கி செல்வி திருமணம் செய்து கொண்டார். இதனிடையே கடையம் அருகே உள்ள துப்பாக்குடி ஓடை பகுதியில் இசக்கி செல்வி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

இசக்கி செல்வி
இசக்கி செல்வி

இது குறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இசக்கி செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்தி விசாரணையில், ராம்குமாரை திருமணம் செய்த இசக்கி செல்வி அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனது தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து வெங்கடேசன் தம்பியான ஆனந்துக்கு போன் செய்த இசக்கி செல்வி, `தெரியாமல் தப்பு செய்துவிட்டேன். அண்ணனுடன் சேர்த்து வையுங்கள்' என்று கூறியுள்ளார். அப்போது ஆனந்த், `தன்னுடன் வா சேர்த்து வைக்கிறேன்' என்று கூறி இசக்கி செல்வியை ஓடைக்கரைக்கு அழைத்து வந்து சரமாரியாக வெட்டிக்கொன்றது தெரியவந்தது.

இளம்பெண்ணை படுகொலை செய்த ஆனந்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in