கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரண வழக்கு: ஆசிரியர்கள் இருவர் கைது

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரண வழக்கு: ஆசிரியர்கள் இருவர் கைது

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரம், தொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியின் ஏராளமான பேருந்துகள் எரிக்கப்பட்டன. காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கல்வீச்சில் காயமடைந்தனர்.

இந்த நிலையில், பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் அளித்திருந்த புகாரின் அடைப்படையில் இந்த இரண்டு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மாணவியைத் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, இவ்வழக்கில் பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in