கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை திசை திருப்புகிறார் சவுக்கு சங்கர்: டிஜிபி அலுவலகத்தில் புகார்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை திசை திருப்புகிறார் சவுக்கு சங்கர்: டிஜிபி அலுவலகத்தில் புகார்

டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் சவுக்கு சங்கர் மீது டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர் பசுன்பொன் பாண்டியன் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பசுன்பொன் பாண்டியன் இன்று டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சவுக்கு சங்கர் ஆகியோர் மீது புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை திசை திருப்பும் நோக்கில் சவுக்கு சங்கர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். குறிப்பாக மாணவியின் தகவலை சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டு வரும் சவுக்கு சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவரான ஏ.கே.விஸ்வநாதனும், சவுக்கு சங்கரும் நெருங்கிய நண்பராக இருக்கின்ற காரணத்தினால் இருவரும் இணைந்து பல ஊழல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஏ.கே.விஸ்வநாதனின் உறவினரான ஒப்பந்ததாரர் நாராயணன் என்பவருக்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 30 கோடி ரூபாய் வரை டெண்டர் ஒதுக்கி முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்கு உறுதுணையாக சவுக்கு சங்கர் செயல்பட்டு, 3 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்றுள்ளார். ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கரிடம் தொடர்ந்து ஏ.கே.விஸ்வநாதன் பேச காரணம் என்ன?. இவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளோம். உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in