கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கில் திடீர் திருப்பம்: உயிரிழந்த மாணவியின் தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்

கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கில் திடீர் திருப்பம்: உயிரிழந்த மாணவியின் தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பாக அவரது இரண்டு தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றேர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இருமுறை பிரேத பரிசோதனை செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில், மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஜூலை 23-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து மாணவியின் உடல், அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர், தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மாணவியின் இறப்பு குறித்து சிசிடிவி காட்சிகள் திடீரென ஊடகங்களில் வெளியானது.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் நெருங்கிய தோழிகள் இரண்டு பேர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் இன்று ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் நீதிபதியின் முன் அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in