கள்ளக்குறிச்சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் வன்முறையில் சேதமான தனியார் பள்ளியில் நடக்க இருந்த குரூப் 4 தேர்வு, வேறு மையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், `தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப்-4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் 24-ம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிர்வாகக் காரணங்களினால், கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏகேடி அகாடமி மெரிக்குலேசன் பள்ளியிலும், ஏகேடி மெமோரியல் வித்யா சாகித் சிபிஎஸ்சி பள்ளியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்படி விண்ணப்பதாரர்களுக்கான மாற்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpseexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விவரம், தொடர்புடைய விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி விண்ணப்பதாரர்கள் மாற்று தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை தேர்வாணையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in