பெயரைக்கெடுக்க பொய் புகார்; கலாஷேத்ரா மாணவி பாலியல் புகாரில் திடீர் திருப்பம்: டிஜிபி அதிரடி உத்தரவு

டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திர பாபுகலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம்; தமிழக டிஜிபி திடீர் உத்தரவு

கலாஷேத்ரா பவுண்டேசனில் பணியாற்றி வரும் ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்பட்ட நிலையில், பொய் தகவலை பரப்பியதாக பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குவித்து சென்னை போலீஸார் விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பவுண்டேஷன் மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இக்கல்லூரியின் முன்னாள் பெண் இயக்குநர் ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கலாஷேத்ரா கல்லூரியின் தற்போதைய இயக்குநர் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு தொடர்பாக மாணவிகள் பலரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி வந்த நிலையில் தகவலறிந்து கலாஷேத்ரா நிர்வாகம், பாலியல் தொந்தரவுகளை விசாரிக்கும் கமிட்டியிடம் விசாரணை நடத்துமாறு கேட்டு கொண்டதன் பேரில் அக்கமிட்டி விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விவகாரம் கசிந்ததால் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. பின்னர் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் விசாரணை திருப்திகரமாக இல்லையென்றால் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பாலியல் தொந்தரவுக்குள்ளானதாக கூறப்பட்ட மாணவி திருவான்மியூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது பெயரையும், நிறுவனத்தின் பெயரை கெடுக்கவும் வேண்டுமென்றே பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும், பொய் தகவலை பரப்பிய சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பதிவிட்ட முன்னாள் இயக்குநருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் கலாஷேத்ரா அறக்கட்டளையில் 7.5 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பெண் இயக்குநர் மீது வழக்கு நடந்து வரும் நிலையில், தற்போதைய இயக்குநர் மீது பொய்யான பதிவு செய்யப்பட்டதா? அல்லது உண்மையிலேயே பாலியல் தொந்தரவு நடந்ததா என விசாரணைக்கு பிறகே முழு தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in