50 மாணவிகளிடம் விவரம் சேகரிப்பு: கலாஷேத்ரா பாலியல் வழக்கில் ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

50 மாணவிகளிடம் விவரம் சேகரிப்பு: கலாஷேத்ரா பாலியல் வழக்கில் ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

கலாஷேத்ரா மாணவிகள் கூறிய பாலியல் புகார் வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாறு கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹரிபத்மன் மட்டுமின்றி மேலும் சில ஊழியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும், ஜாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவர்கள் முன்வைத்தனர்.

பேராசிரியர் ஹரிபத்மன்
பேராசிரியர் ஹரிபத்மன்

இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டு விசாரணை நடத்தியது. அவ்வாறு விசாரணை நடத்தியபோது நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர். இவ்வாறாக பாதிக்கப்பட்ட மாணவிகள் 162 பேர் புகார் அளித்திருந்த நிலையில் இந்தப் புகார்கள் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் சென்னை காவல்துறைக்கு பரிந்துரை செய்தது.

இந்தநிலையில் பாலியல் புகார் தொடர்பாக இதுவரை 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் போலீஸார் நேரடியாக சென்று விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்துள்ளனர். இதனையடுத்து விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயார் நிலையில் இருப்பதாகவும், ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக அடையாறு மகளிர் காவல் நிலைய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததை அடுத்து கடந்த ஜூன் 6-ம் தேதி அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஹரி பத்மன் தினமும் அடையாறு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in