போலீஸ் சோதனையில் சிக்கிய 'காஜல்' மரங்கள்: மூன்று பேர் கைது

போலீஸ் சோதனையில் சிக்கிய 'காஜல்' மரங்கள்: மூன்று பேர் கைது

உத்தராகண்ட் மாநிலத்தில் 14 லட்சம் மதிப்புள்ள மருத்துவக்குணம் வாய்ந்த காஜல் மரங்களைக் கடத்திய மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இமயமலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளில் காணும் 'காஜல்' மரங்கள் மருத்துவக்குணம் வாய்ந்தவை. மேலும் புத்தத் துறவிகளுக்கான கிண்ணங்கள் தயாரிக்கவும் இம்மரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக அரிய வகையான இவ்வகை மரங்களை அழிவிலில் இருந்து காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலம் துண்டாவில் உள்ள சோதனைச்சாவடியில் போலீஸார் இன்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று பேர் 144 'காஜல்' மரக்கட்டைகளுடன் வந்தது தெரிய வந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் துண்டாவில் இருந்து சஹரன்பூருக்கு இந்த மரக்கட்டைகளைக் கடத்துவது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு 14 லட்ச ரூபாயாகும்.

இதையடுத்து 'காஜல்' மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸார், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் டெஹ்ராடூனைச் சேர்ந்த ஜனக் பகதூர், கெம்ராஜ் ரோகயா மற்றும் சஹாரன்பூரைச் சேர்ந்த வினோத் குமார் என்று தெரிய வந்தது.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி கூறுகையில்," மருத்துவக்குணம் வாய்ந்த 'காஜல்' மரக்கட்டைகளைக் கடத்திய மூவரை கைது செய்துள்ளோம். இவர்கள் யாருக்கு இவற்றைக் கொண்டு சென்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in