`கைலாசா உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும்'- இயக்குநர் பேரரசுக்கு விருது வழங்கி நித்யானந்தா வாழ்த்து!

`கைலாசா உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும்'- இயக்குநர் பேரரசுக்கு விருது வழங்கி நித்யானந்தா வாழ்த்து!

இயக்குநர் பேரரசுக்கு கைலாசா தர்ம ரட்சகர் விருதை நித்யானந்தா வழங்கியுள்ளார்.

கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி வாழ்ந்து வரும் நித்யானந்தா, அண்மையில் திருச்சி சிவா மகன் சூர்யாவுக்கு விருது ஒன்றை வழங்கினார். தற்போது, இயக்குநர் பேரரசுக்கு கைலாசா தர்ம ரட்சகர் விருதை நித்யானந்தா வழங்கியுள்ளார். இந்த விருதை வழங்கி பேசிய நித்யானந்தா, "பேரரசு அவர்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. திருவண்ணாமலை என்ற பெயராலேயே ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை அளித்திருக்கின்றீர்கள். உங்களுடைய இந்து மதப்பற்றும் இந்து மதத்திற்காக நீங்க தொடர்ந்து குரல் கொடுப்பதும், இந்து மதத்திற்காக நீங்கள் களம் காணுவதும் நீங்கள் செய்கிற மிகப்பெரிய பணிகளை நன்கு அறிவேன்.

உங்களுடைய எல்லா திரைப்படங்களுடைய தலைப்புகளுமே ஆன்மிக ஸ்தலங்களின் பெயர்களாகத்தான் இருக்கும். சிவகாசி, திருவண்ணாமலை, பழனி, திருப்பதி என்று சொல்லலாம். உங்களுடைய இந்து மதப்பணி மிகப்பெரும் பணி. அதற்காக தலைவணங்குகிறேன். உங்களோடு என்றென்றும் தோள் கொடுத்து நிற்பேன். நானும், கைலாசமும் நீங்கள் செய்யும் இந்து மதப் பணிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in