கபடி விளையாட்டில் அசத்திய வீரர்: வீடு திரும்பியபோது நடந்த சோகம்

கபடி விளையாட்டில் அசத்திய வீரர்: வீடு திரும்பியபோது நடந்த சோகம்

கபடி விளையாடிவிட்டு வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கும்பகோணத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயிலில் நேற்று இரவு கபடி போட்டி நடைபெற்றது. சின்ன இளங்கோவன் என்பவரின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அணியைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு கபடி போட்டியில் விளையாடினர். இந்நிலையில் நன்னிலத்தை சேர்ந்த வாலிபர் செந்தில்குமார் என்பவர் கபடி விளையாடியுள்ளார். அவரது ஆட்டத்தில் அனல் பறந்துள்ளது. இதையடுத்து, கபடி போட்டி முடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார் செந்தில் குமார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். சக வீரர் உயிரிழந்தது அணி வீரர்களை வேதனையை அடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in