டைவ் அடித்து பயிற்சியில் ஈடுபட்ட கபடி வீரர் உயிரிழந்த சோகம்: கோயில் திருவிழாவில் நடந்த விபரீதம்

டைவ் அடித்து பயிற்சியில் ஈடுபட்ட கபடி வீரர் உயிரிழந்த சோகம்: கோயில் திருவிழாவில் நடந்த விபரீதம்

கோயில் திருவிழாவின் போது கரணம்(டைவ்) அடித்து பயிற்சி பெற்ற கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டுத் தெருவில் மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 8-ம் தேதி கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கேஎம்எஸ் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சியை மேற்கொண்டனர். அப்போது களத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த கபடி வீரர் வினோத்குமார்(34) கரணம் அடித்து பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது கரணம் அடிக்கும் போது கழுத்தில் அடிபட்டு மயங்கி விழுந்தார்.

அவரை உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கபட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், சிகிச்சையில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக வினோத்குமார் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சிவகாமி என்ற மனைவியும் சந்தோஷ், கலையரசன் என்ற மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கோயில் திருவிழாவின் போது கபடி பயிற்சியின் போது வினோத்குமார் கரணம் அடிப்பதும், அப்போது தலையில் அடிபட்டு மயக்கமடைந்து மூர்ச்சையாகும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in