நீதிபதி நாகரத்னா: உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வாய்ப்பு

பணமதிப்பிழப்பு வழக்கில் நாட்டை திரும்பி பார்க்க வைத்தவர்
நீதிபதி நாகரத்னா
நீதிபதி நாகரத்னா

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு மூலமாக, நாட்டையே திரும்பிபார்க்க வைத்தவர் நீதிபதி நாகரத்னா. இவர் அடுத்த 4 ஆண்டுகளில், நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்துக்கு பெருமை சேர்க்க உள்ளார்.

2016-ல் அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் 4 நீதிபதிகள், அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். எஞ்சிய ஒரு நீதிபதியான நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியிருந்தார். ’சட்டப்படியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசு நிறைவேற்றி இருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார். நீதிபதி நாகரத்னாவின் இந்த முடிவும், அவரது கருத்தும் நாட்டை திரும்பி பார்க்க வைத்தது.

இந்த நீதிபதி மற்றுமொரு சிறப்புக்கும் காத்திருக்கிறார். நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தில் நாகரத்னா பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது. 2017-ம் ஆண்டில் நாகரத்னா பொறுப்பு ஏற்பின், ஓய்வுக்கு முன்னதாக அவர் அந்த பதவியில் 36 நாட்கள் நீடிப்பார்.

பெங்களூருவை சேர்ந்த நாகரத்னா, வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கியபோது வணிகம், காப்பீடு மற்றும் சேவை சார்ந்த துறைகளின் வழக்குகளில் அதிகம் பங்கேற்றுள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2010-ல் பொறுப்பேற்ற இவர், 2021-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். தற்போது 60 வயதாகும் நீதிபதி நாகரத்னா, முன்னாள் தலைமை நீதிபதி ஈ.எஸ்.வெங்கட்ராமையாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in