உலக சாம்பியனுக்கு இப்படியொரு நிலையா?- துவம்சம் செய்தது அடிபட்ட பாம்பு ஆஸ்திரேலியா

உலக சாம்பியனுக்கு இப்படியொரு நிலையா?- துவம்சம் செய்தது அடிபட்ட பாம்பு ஆஸ்திரேலியா

டி20 உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை 3-0 கணக்கில் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் 48 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்- வார்னர் ஆகியோரின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் குவித்தது.

ஹெட் 152 ரன்களும், வார்னர் 106 ரன்களும் விளாசினர். இதையடுத்து 364 ரன்கள் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. மலான் 2 ரன்னிலும், ராய் 33 ரன்னிலும், பில்லிங்ஸ் 7 ரன்னிலும், வின்ஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் பட்லர் 1 ரன்னிலும், மொயீன் அலி 18 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் அந்த அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தி உள்ளது.

டி20 உலக கோப்பை போட்டியில் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெளியேறியது. சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி அடிபட்ட பாம்பாக இருந்து உலக சாம்பியனை துவம்சம் செய்துள்ளது.

டி20 உலக கோப்பை சாம்பியனான இங்கிலாந்து அணி மோசமாக விளையாடியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in