வேலையில்லாத விரக்தி: தற்கொலை செய்ய 3 பாக்கெட் ஷேவிங் பிளேடுகளை விழுங்கிய வாலிபர்

யாஷ்பால் ராவ் விழுங்கிய பிளேடுகள்.
யாஷ்பால் ராவ் விழுங்கிய பிளேடுகள்.வேலையில்லாத விரக்தி: தற்கொலை செய்ய 3 பாக்கெட் ஷேவிங் பிளேடுகளை விழுங்கிய வாலிபர்

நிலையான வேலையில்லாத மனஉளைச்சலில் 56 ஷேவிங் பிளேடுகளை விழுங்கி தற்கொலை முயன்ற இளைஞர் மருத்துவக்குழுவால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோரைச் சேர்ந்தவர் யாஷ்பால் ராவ்(26). இவர் பாலாஜி நகரில் நான்கு நண்பர்களுடன் வசித்து வந்தார். அத்துடன் சஞ்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நிலையில்லாத வேலை என்பதால் பொருளாதார ரீதியாக யாஷ்பால் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் தற்கொலை செய்ய அவர் முடிவு செய்தார்.

இதையடுத்து ஷேவிங் செய்யும் பிளேடு பாக்கெட்டுகளை வாங்கி அப்படியே விழுங்கியுள்ளார். இதனால், வயிற்றுக்குள் சென்ற பிளேடுகளால் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு ரத்தவாந்தி எடுத்து யாஷ்பால் துடித்துள்ளார். இதையடுத்து அவரை நண்பர்கள் மீட்டு மன்மோகன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரது வயிற்றில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது 56 ஷேவிங் பிளேடுகள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து எஸ்டோஸ்கோபி செய்து உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பிளேடுகளை வெளியேற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து 7 பேர் கொண்ட மருத்துவக்குழு மூன்று மணி நேரம் போராடி யாஷ்பால் ராவ் வயிற்றில் இருந்து அறுவை கிச்சை மூலம் அனைத்து பிளேடுகளையும் அகற்றியது. தற்போது யாஷ்பால் ராவ் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வேலையில்லாத விரக்தியால் தற்கொலை செய்ய பிளேடு பாக்கெட்டுகளை வாலிபர் விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in