மாணவர் போராட்டத்தை முடக்க அதிரடி சட்டங்கள்: ஜேஎன்யூ இன்று முதல் அமல்!

மாணவர் போராட்டம்
மாணவர் போராட்டம்

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தை முடக்குவதற்கான புதிய அதிரடி சட்டங்கள் இன்று(மார்ச்.2) முதல் அமலாகின்றன.

நாட்டின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்று, டெல்லியில் அமைந்திருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் பிரபல்யத்துக்கு நிகராக இதில் பயிலும் மாணவர்களின் போராட்டங்களும் பிரசித்தி பெற்றது. நாட்டில் நடக்கும் பிரச்சினை எதுவானாலும், அவற்றை பிரதிபலிக்கும் வகையில் ஜேஎன்யூ வளாகத்தில் மாணவர்கள் உரிமைக் குரலை உரத்து முன்னெடுப்பார்கள்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைந்தது முதலே, நேருவின் பெயரிலான பல்கலைக்கழகத்தின் பெருவாரி மாணவர் சங்கங்கள் மத்தியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றை முடக்க அரசு தரப்பிலும் ஆக முடிந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனபோதும், மாணவர் போராட்டங்கள் தொடர்ந்தபடியே உள்ளன.

இந்த போராட்டங்களை முடக்குவதற்கு தோதாக, பல்கலைக்கழகத்துக்கான புதிய ஒழுங்கு விதிகளை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவை இன்று முதல் அங்கே நடவடிக்கைக்கு வருகின்றன. உதாரணமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டதாக தெரிய வந்தால், ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்படும் அல்லது டிகிரி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும்.

இப்படி உண்ணாவிரத போராட்டம், கேரோ செய்தல், முழக்கமிடுதல், வகுப்புகளை புறக்கணித்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்கு அபராதம் விதிப்பது முதல் பல்கலைக்கழகம் மற்றும் விடுதியிலிருந்து வெளியே அனுப்புவது வரை பல்வேறு தண்டனை விதிகளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in