7வது ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ... புதிய சலுகைகள்! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஜியோ
ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஏழாவது ஆண்டு பயணத்தை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டு இதே செப்டம்பரில் காலடி வைத்த ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், இந்திய தொலைதொடர்புத் துறையில் புதிய மாற்றங்களுக்கு வித்திட்டது. ஒரு ஜிபி டேட்டாவை ரீசார்ஜ் செய்து அதை வைத்தே மாதம் முழுமைக்கும் பயன்படுத்தி வந்த இந்தியர்கள், அதன் பின்னர் தினத்துக்கு ஒரு ஜிபி பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

செல்போன் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா உபயோகம் ஆகியவற்றுக்காக தனி கட்டணங்களில் தடுமாறியவர்கள், கட்டற்ற இணையத்தில் சதா சஞ்சரிக்க ஆரம்பித்தார்கள். ஜியோ கொண்டு வந்த 4 ஜி வசதியும், அதனை சல்லிசான கட்டணத்தில் தந்ததும், சக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் அழுத்தம் தந்தன. இதனால் ஒட்டுமொத்தமாய் இந்தியர்களின் இணைய பயன்பாடு, அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்சார்ந்து ஆரோக்கிய மாற்றங்களுக்கு வித்திட்டது.

இந்த மாற்றங்களை நிகழ்த்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 7ம் ஆண்டு பயணத்தை முன்னிட்டு, சில சலுகை அறிவிப்புகளை தனது ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று(செப்.5) தொடங்கி செப்.30 வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய அனுகூலங்களை பெறலாம் எனவும் ஜியோ அறிவித்துள்ளது. அப்படி அறிவிப்பான திட்டங்கள் சுருக்கமாக இங்கே...

ஜியோ 7ம் ஆண்டு சலுகைகள்
ஜியோ 7ம் ஆண்டு சலுகைகள்

ரூ.299, ரூ.749 மற்றும் ரூ.2,999 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் டேட்டா மற்றும் சிறப்பு வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. ரூ.299 திட்டத்தின் கீழ், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் இலவச 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. சிறப்புச் சலுகையாக 7ஜிபி டேட்டாவை கூடுதலாக பெறலாம்.

ரூ.749 திட்டத்தின் கீழ், தினத்துக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை 90 நாட்கள் வேலிடிட்டியில் பெறலாம். சிறப்புச் சலுகையாக 14ஜிபி கூடுதல் டேட்டாவை ஜியோ அறிவித்துள்ளது. அடுத்தபடியாக ரூ.2999 திட்டத்தின் கீழ் தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 365 நாட்கள் வேலிடிட்டியில் வழங்குகிறது. கூடுதல் சலுகையாக 21ஜிபி டேட்டாவை, தலா 7 ஜிபி என 3 கூப்பன்கள் வாயிலாக ஜியோ வழங்குகிறது. இவற்றுக்கு அப்பால் ஹோட்டல் முதல் விமானக் கட்டணம் வரை பல்வேறு சலுகைகளையும் ஜியோ அறிவித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in