77%: இட ஒதுக்கீட்டை உயர்த்தி மசோதா நிறைவேற்றியது ஜார்கண்ட்

77%: இட ஒதுக்கீட்டை உயர்த்தி மசோதா நிறைவேற்றியது ஜார்கண்ட்

ஜார்கண்ட் சட்டப்பேரவை, மாநிலத்தின் இடஒதுக்கீடு வரம்பை 77%ஆக உயர்த்தி மசோதா நிறைவேற்றியுள்ளது.

இதற்காக ஏற்பாடான சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், பல்வேறு பிரிவினருக்கான தற்போதைய 60% இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த முடிவானது. தற்போதை இடஒதுக்கீடு வரம்பின் கீழ் எஸ்டி-26, எஸ்சி- 10, ஓபிசி -14, பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினர் -10 என்பதாக சதவீதங்களில் இடஒதுக்கீடு உள்ளது. இந்த வகையில் ஜார்கண்டில் 60% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

புதிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் எஸ்டி-28, எஸ்சி-12, ஓபிசி -12, பிற்படுத்தப்பட்டோரில் மிகவும் நலிவடைந்தோரான இபிசி-15 என சதவீதங்களில் அவை மாற்றம் காணும். இவற்றுடன் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கான 10% சேர்ந்தால் 77% என்பதாக புதிய இடஒதுக்கீட்டின் வரம்பு உயர்வு காணும்.

கூடுதல் இடஒதுக்கீடு என்பது நடப்பு ஆளும் கூட்டணியான ஜேஎம்எம் மற்றும் பல்வேறு கட்சிகளாலும் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டவை. பாஜக உறுப்பினர்கள் மட்டும் புதிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மசோதா நிறைவேற்றம் குறித்து பேசிய மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு ஜார்கண்ட் மக்களுக்கான பாதுகாப்பு கேடயம் என்று வர்ணித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in