தீபாவளி பரிசாக 8 பேருக்கு கார், 18 பேருக்கு டூவீலர்: ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நகைக்கடை ஓனர்

தீபாவளி பரிசாக 8 பேருக்கு கார், 18 பேருக்கு டூவீலர்:  ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நகைக்கடை ஓனர்

தீபாவளிக்கு போனஸ் வழங்கவே யோசிக்கும் முதலாளிகள் மத்தியில் ஒருவர் தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களைத் தீபாவளி பரிசாகக் கொடுத்து அசத்தியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயந்தி லால். இவர் சல்லானி ஜுவல்லரி என்ற நகைக்கடை நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். விழாக் காலங்களில் இவரது கடையில் வியாபாரம் அமோகமாக இருந்து வந்துள்ளது. இதனால் பொங்கல், ஆயுதபூஜை, தீபாவளி, ஓணம் எனப் பண்டிகை காலங்களில் ஊழியர்கள் உற்சாகமாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இந்த தீபாவளிக்குத் தனது ஊழியர்களுக்கு சிறப்புப் பரிசு கொடுக்க முடிவெடுத்து, அதன்படி கார் மற்றும் இருசக்கர வாகனங்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அதன்படி 8 பேருக்கு காரும், 18 பேருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் 1.8 கோடியாம்.

“என்னுடைய உயர்வு, தாழ்வு எல்லாவற்றிலும் எனது ஊழியர்கள் பங்கெடுத்து கொள்கிறார்கள். அவர்களின் உழைப்பால்தான் இந்த நிறுவனம் உயர்ந்துள்ளது. அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த பரிசுகளைக் கொடுத்துள்ளேன்” என ஜெயந்தி லால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in